மீனவர்கள் மேம்பாட்டுக்கு ரூ.576 கோடி மதிப்பிலான திட்டங்கள் – தங்கச்சிமடம் பகுதியில் புதிய துறைமுகம் வரவுள்ளது!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – “கச்சத்தீவை மீட்க நடவடிக்கையில்லை; மிகுந்த வேதனை!”

பிரதமர் நரேந்திர மோடி தனது இலங்கை பயணத்தின் போது, கச்சத்தீவை மீட்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் நலனுக்காக ரூ.576 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இது அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர்,
கச்சத்தீவை மீட்கவும்,
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்மீனவர்களை விடுவிக்கவும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நினைவுபடுத்தினார்.

மேலும், இலங்கை சிறைகளில் துயரத்தில் இருக்கும் நம் மீனவர்களின் விடுதலைக்காக பிரதமரிடம் நேரடியாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், இலங்கை பயணத்தின் போது பிரதமர் மோடி எந்தவிதமான முக்கியமான முன்னெடுப்பும் எடுத்ததாக தெரியவில்லை என்றும்,
தமிழ்நாடு அரசு வைத்த கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதற்காக மிகுந்த கவலையிலும் நம்பிக்கையிலும் இருக்கிறோம் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *