ஏப்ரல் 16 அன்று, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சி மிகச்சிறப்பானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தற்போது தமிழகத்தின் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 51.3% ஆக உள்ளது, இது தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகம். மத்திய அரசு 2030க்குள் 50% GER அடைய நோக்கமிட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அந்த இலக்கை ஏற்கனவே கடந்துவிட்டது என முதலவர் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையை (NEP) நிறைவேற்றாத நிலையில் கூட, தமிழகத்தின் கல்வி தரம் முன்னணி நிலையை பெற்றுள்ளது. மேலும், தேசிய நிறுவனங்களின் தரவரிசை (NIRF) பட்டியலில் தமிழகத்தின் 22 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளன
உயர்கல்வி பாடத்திட்டத்தில் அவசர மாற்றங்களை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்
